Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கொம்பன்

சொல் பொருள் ஆண்பிள்ளை சொல் பொருள் விளக்கம் இவை ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்பவற்றைக் குறிக்கும் தக்கலை வட்டார வழக்குச் சொல்லாகும். கொம்பன் என்பது கொம்புடைய யானை போன்றவன் என்னும் உவமை வழியாக வந்த பெயராகும்.… Read More »கொம்பன்

கொம்படி

சொல் பொருள் வடகிழக்குத் திசை மழைக்குறி காணும் திசையாம். அத் திசையைக் ‘கொம்படி’ என்பது தலைக்குளம் வட்டார செங்கல் சூளையர் வழக்குச் சொல்லாகும் சொல் பொருள் விளக்கம் வடகிழக்குத் திசை மழைக்குறி காணும் திசையாம்.… Read More »கொம்படி

கொப்பி

சொல் பொருள் பிடியாகப் பிடித்து (பிண்டித்து) உருட்டி வைத்த சாண உருண்டையைக் கொப்பி என்பது செட்டி நாட்டு வழக்கு சொல் பொருள் விளக்கம் பிடியாகப் பிடித்து (பிண்டித்து) உருட்டி வைத்த சாண உருண்டையைக் கொப்பி… Read More »கொப்பி

கொப்பு

சொல் பொருள் கொம்பு பெண் ஆட்டுக்கு இருந்தால் அதனைக் கொப்பு(கொம்பு)ஆடு என்பது ஆயர்வழக்கு. சொல் பொருள் விளக்கம் செம்மறியாட்டுக் கடாவிற்குக் கொம்பு உண்டு. பெண் ஆட்டுக்குக் கொம்பு இல்லை. அரிதாக, கொம்பு பெண் ஆட்டுக்கு… Read More »கொப்பு

கொந்தல்

சொல் பொருள் குமரி மாவட்டத்தில் மேல்காற்றைக் கொந்தல் என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டத்தில் மேல்காற்றைக் கொந்தல் என வழங்குகின்றனர். கொண்டல் என்பது நீர்கொண்டுவரும் கீழ்காற்றைக் குறிப்பது பொதுவழக்கு. இது மாவட்ட… Read More »கொந்தல்

கொதுக்கு

சொல் பொருள் இலாமிச்சை, புளி முதலியவற்றைக் கரைத்து வடித்த பின் எஞ்சும் எச்சத்தைக் கொதுக்கு என்பர் சொல் பொருள் விளக்கம் இலாமிச்சை, புளி முதலியவற்றைக் கரைத்து வடித்த பின் எஞ்சும் எச்சத்தைக் கொதுக்கு என்பர்.… Read More »கொதுக்கு

கொதி

சொல் பொருள் உலைநீர் மேலும் மேலும் எழுவது போல மேலே மேலே எழும் ஆசையைக் கொதி என்றது எண்ணச் சிறப்பின் இயல்பான விளைவாம் சொல் பொருள் விளக்கம் கொதி என்பதற்கு ஆசை என்னும் பொருள்… Read More »கொதி

கொண்டு மாறி

சொல் பொருள் கொண்டு மாறி என்பது பெண்கொண்டு அவ்வீட்டுக்குப் பெண் கொடுப்பது கொண்டுமாறி என்பதாம். “பெண் கொடுத்து, பெண் எடுப்பது” என்பது அது சொல் பொருள் விளக்கம் ஆண்டு மாறி என்பது வசைச் சொல்.… Read More »கொண்டு மாறி

கொடை

சொல் பொருள் கொடை என்பதற்குப் பெருவிழா என்னும் பொருள், கன்னங் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் கொடை என்பதற்குப் பெருவிழா என்னும் பொருள், கன்னங் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது.… Read More »கொடை

கொடை கல்

சொல் பொருள் குடைகல் என்பது கொடை கல் என உகர ஒகரத் திரிபாக வழங்குகின்றது. குடைகல் என்பதற்கு உரல் என்னும் பொருள் திருப்பூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் குடைகல் என்பது கொடை… Read More »கொடை கல்