Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கொங்கை

சொல் பொருள் மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் கொங்கை என்பது மார்பகத்தைக் குறித்தல் பொது வழக்கு. மரத்தில் இருந்து… Read More »கொங்கை

கொக்கு முக்காடு

சொல் பொருள் கூனிக் குறுகி மூடிக் கிடத்தல் என்னும் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. வாட்டம், வாட்டமாக இருத்தல் என்னும் பொருளது அது. சொல் பொருள் விளக்கம் முக்காடு, முடக்கம் என்பவையெல்லாம் சோர்ந்து கிடத்தல்… Read More »கொக்கு முக்காடு

கொக்கி

சொல் பொருள் நெடுவிளை வட்டாரத்தில் கொக்கி என்பது தொரட்டியைக் குறிக்கிறது சொல் பொருள் விளக்கம் கழுத்துச் சங்கிலி, திறவுகோல் (சாவிக்) கொத்து ஆயவற்றுக்கு உள்ள கொக்கி பொது வழக்கு. நெடுவிளை வட்டாரத்தில் கொக்கி என்பது… Read More »கொக்கி

கொக்கணை

சொல் பொருள் கொக்கணை என்பது பேராவூரணி வட்டாரவழக்கில் தொரட்டி என்பதையும், கருங்கல் வட்டாரத்தில் கழுத்து என்பதையும் குறிக்கின்றது. இச்சொல் கருவூர் வட்டாரத்தில் கருமித்தனம் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கொக்கு, கொக்கி… Read More »கொக்கணை

கொக்காணி

சொல் பொருள் கொக்காணி என்பது கேலி, கேலிச் சிரிப்பு என்னும் பொருளில் ஒட்டன்சத்திர வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் சிரிப்பு, சிரிப்பாணி என வழங்கப்படுதல் நெல்லை, முகவை வழக்கு. கொக்காணி என்பது… Read More »கொக்காணி

கையேடு

சொல் பொருள் பெரிய புலவர் உரைவிளக்கம் செய்வார். அவர்க்குத் துணையாக வந்தவர் இசையோடு நூலைப்பார்த்துப் படிப்பார். அவரைக் கையேடு என்பது வழக்கு சொல் பொருள் விளக்கம் கையேடு என்பது கையில் உள்ள ஏடு என்பதைக்… Read More »கையேடு

கையால்

சொல் பொருள் வேலி, சுவர் என்னும் பொருளில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் கை என்பது ஒழுக்கம் என்னும் பொருளது. அது கட்டமை ஒழுக்கம் எனப்படும். அக்கட்டுதல் வழியாக நிலத்திற்கு அமைக்கப்படும். வேலியைக் கட்டார்ப்பு(கட்டாப்பு)… Read More »கையால்

கையமர்த்துதல்

சொல் பொருள் நிலக்கோட்டை வட்டாரத்தில் கையமர்த்துதல் என்பது வழியனுப்புதல் குறிக்கும் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ‘கையசைத்தல்’ வழியனுப்புவார் வழக்கமாக உள்ளது. நிலக்கோட்டை வட்டாரத்தில் கையமர்த்துதல் என்பது வழியனுப்புதல் குறிக்கும் வட்டார… Read More »கையமர்த்துதல்

கை மடக்கு

சொல் பொருள் கையூட்டு சொல் பொருள் விளக்கம் கையூட்டு என்பது வெளிப்படு பொது வழக்கு. வாயில் ஊட்டுவது போல் கையில் ஊட்டுவது (இலஞ்சம்); இஞ்சக்கம் என்பது முகவை மாவட்ட வழக்கு). கோட்டாறு வட்டாரத்தில் கைமடக்கு… Read More »கை மடக்கு

கைபோடல்

சொல் பொருள் விலைபேசுதல் என்னும் பொருளில் வருவது கைபோடல் – தழுவுதல் சொல் பொருள் விளக்கம் மாடு ஆடு விற்று வாங்கும் தரகுத் தொழிலில் கை போடுங்கள்; கைபோட்டுப் பேசுங்கள் என்னும் வழக்கம் உண்டு.… Read More »கைபோடல்