Skip to content

வ வரிசைச் சொற்கள்

வ வரிசைச் சொற்கள், வ வரிசைத் தமிழ்ச் சொற்கள், வ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வள்ளிசு

சொல் பொருள் மொத்தமாக, ஒன்று விடாமல் சொல் பொருள் விளக்கம் “அவன் வள்ளிசாக அள்ளிக் கொண்டு போய்விட்டான்” என்பர். வள்ளிசு என்பது மொத்தமாக, ஒன்று விடாமல் என்னும் பொருளது. வளமாக – ஏராளமாக –… Read More »வள்ளிசு

வழிக்காசு

சொல் பொருள் போக்குவரவுக் காசு, வழிச் செலவு பயணப்படி சொல் பொருள் விளக்கம் போக்குவரவுக் காசு, வழிச் செலவுக் காசு என்பதை ஏலக்காய்த் தோட்டத்தார் வழிக்காசு என்கின்றனர். ‘பயணப்படி’ என்பதை ‘வழிக்காசு’ ‘வழிச் செலவு’… Read More »வழிக்காசு

வலையான்

சொல் பொருள் வலைபோட்டு மீன்பிடிப்பவன் சிலந்தி சொல் பொருள் விளக்கம் வலைபோட்டு மீன்பிடிப்பவன் வலையான் எனப்படுதல். பொது வழக்கு. வலை பின்னும் சிலந்தியை வலையான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். ‘சிலந்தி வலை’ என்பது… Read More »வலையான்

வலசை

வலசை

வலசை என்பதன் பொருள் புலம் பெயர்தல். 1. சொல் பொருள் புலம் பெயர்தல் பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி உணவு, நீர் போன்றவற்றைத் தேடியும் தகுந்த தட்பவெப்பத்தைத் தேடியும்… Read More »வலசை

வலக்கை

சொல் பொருள் உண்மை சத்தியம் சொல் பொருள் விளக்கம் வலப்புறக் கை வலக்கை என்பது பொது வழக்கு. அதற்கு உண்மை என்னும் பொருள் குற்றால வட்டார வழக்கில் உள்ளது. வலக்கையை அடித்து உண்மை கூறுதல்… Read More »வலக்கை

வல்லளை

சொல் பொருள் வளை சொல் பொருள் விளக்கம் எலி வளை, நண்டு வளை என்பவை வழக்குச் சொற்கள். வளை என்பதை வல்லளை என்பது அலங்கா நல்லூர் வட்டார வழக்காகும். அளை என்பதும் வளை, புற்று… Read More »வல்லளை

வயல்பயறு

சொல் பொருள் நெல்விளை நிலத்திலே ‘சிறுபயறு’ ஈரப்பதத்திலே தெளிக்கப்படும். வயல் பதத்திலே முளைத்து விளைவு தரும் அப்பயறு வயல் பயறு சொல் பொருள் விளக்கம் நெல்விளை நிலத்திலே ‘சிறுபயறு’ ஈரப்பதத்திலே தெளிக்கப்படும். வயல் பதத்திலே… Read More »வயல்பயறு

வந்தட்டி

சொல் பொருள் நிலையாகத் தங்குதல் இல்லாமல் வந்து போகின்றவரை வந்தட்டி என்பது தென்னக வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நிலையாகத் தங்குதல் இல்லாமல் வந்து போகின்றவரை வந்தட்டி என்பது தென்னக வழக்காகும். “அவன் என்றைக்கும்… Read More »வந்தட்டி

வதியழிதல்

சொல் பொருள் வழியில் நடையில் கிடந்து மிதிபடுதலாகும் பொருள் மிகுதி காட்டும் இச்சொல் சொல் பொருள் விளக்கம் பொருள்களின் விளைவோ, உருவாக்கமோ மிகுமானால் விலை சம்பல் (குறைதல்) ஆகிவிடும். அதனால் பொருளைக் குறைந்த விலையில்… Read More »வதியழிதல்

வத்தை

சொல் பொருள் சிறுபடகு உலர்ந்த கட்டைகளை இணைத்து மிதவையாகச் செய்யப்பட்டது வத்தை சொல் பொருள் விளக்கம் வத்தை என்பது பரதவர் (மீனவர்) வழக்குச் சொல். மிதவை வகையுள் ஒன்று அது. வற்றிக் காய்ந்த வற்றல்… Read More »வத்தை