Skip to content

தீ வரிசைச் சொற்கள்

தீ வரிசைச் சொற்கள், தீ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தீ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தீ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தீமூட்டு

சொல் பொருள் (பெ) தீ மூட்டுவதற்குரிய பொருள், சொல் பொருள் விளக்கம் தீ மூட்டுவதற்குரிய பொருள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lighting material தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் கல்லா… Read More »தீமூட்டு

தீமடு

சொல் பொருள் (வி) நெருப்புமூட்டு சொல் பொருள் விளக்கம் நெருப்புமூட்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  ignite fire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும் இ… Read More »தீமடு

தீ

சொல் பொருள் (வி) (பயிர் முதலியன) கருகு, வாடு, (பெ) 1. நெருப்பு, 2. தீமை, தீ, தே என்பவை இனிமைப் பொருள் தருதல் பொது வழக்கு தீ என்பது அழகு என்னும் பொருளில்… Read More »தீ

தீற்றி

சொல் பொருள் உணவைத் தீற்றி என்பது இலவுவிளை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் திற்றுதல் = தின்னுதல், உண்ணுதல். திற்றி > தீற்றி. தின் > தீன் > தீனி போல. உணவைத்… Read More »தீற்றி

தீயாட்டு

சொல் பொருள் துணியைப் பந்தாகச் சுருட்டி எண்ணெயில் ஊற வைத்துத் தீமூட்டிச் சுழற்றுதல் சூ(ழ்)ந்து எனப்படுதல் பொது வழக்கு. அதனைத் தீயாட்டு என்பது குற்றால வழக்கு சொல் பொருள் விளக்கம் துணியைப் பந்தாகச் சுருட்டி… Read More »தீயாட்டு

தீயல்

சொல் பொருள் தீப்போல் எரிவு உண்டாக்குவதைத் தீயல் என்று நாஞ்சில் நாட்டில் வழங்குகின்றனர். தீயல் என்பது எரிதல் பொருளில் காரக் குழம்பைக் குறித்தல் அருகிய வழக்காக அறியத் தக்கதாம். சொல் பொருள் விளக்கம் தீப்போல்… Read More »தீயல்

தீந்து

சொல் பொருள் வண்டிச் சக்கரத்தில் தேய்மானம், ஒலி முதலியவை இல்லாமல் பாதுகாக்க ‘மை’ போடுவது வழக்கம். ‘மசகு’ என்பது முகவை வழக்கு. திருச்செங்கோடு வட்டாரத்தில் மை என்பதைத் தீந்து என்கின்றனர். சொல் பொருள் விளக்கம்… Read More »தீந்து

தீத்தாங்கி

சொல் பொருள் பரணை என்னும் பொருளில் தீத்தாங்கி என்பது திருமங்கல வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் பயன்படுத்தி முடித்த பொருள்களை – அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தாத பொருள்களை ஒதுக்கிடத்தில் வைப்பது வழக்கம்.… Read More »தீத்தாங்கி

தீசல்

சொல் பொருள் தீசல் என்பது பொறாமை என்னும் பொருளில் வழங்குகின்றது. உள்ளெரிவே பொறாமை ஆதலால் அதன் வெளிப்படு விளக்கம் இதுவாம். சொல் பொருள் விளக்கம் எரிதல், எரிந்து கருகல், வாடை என்பவை பொது வழக்குப்… Read More »தீசல்

தீயாற்றல்

சொல் பொருள் தீயாற்றல் – குழிமெழுகுதல் சொல் பொருள் விளக்கம் இறந்தவர்களை எரித்தால் மறுநாள் தீயாற்றல் என ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். புதைத்தாலும் நிகழ்வதே. அதனைக் குழிமெழுகுதல் பாலாற்றல் காடாற்றல் எனவும் வழங்குவர். தீயை… Read More »தீயாற்றல்