Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

ஆட்சை

சொல் பொருள் ஆளுகை, ஆளுமை என்னும் பொருளது ஆட்சை என்பது சொல் பொருள் விளக்கம் ஆளுகை, ஆளுமை என்னும் பொருளது ஆட்சை என்பது. ஞாயிறு திங்கள் முதலியவற்றின் கிழமை (உரிமை) பொருள் போல, ஆட்சை… Read More »ஆட்சை

ஆகியிருத்தல்

சொல் பொருள் கருக்கொண்டிருத்தல் சொல் பொருள் விளக்கம் உண்டாகியிருத்தல் அல்லது கருக்கொண்டிருத்தல் என்பது பொதுவழக்கு. ஆகியிருப்பவள் ‘ஆய்’ எனப் பட்டாள். ஆய் = தாய். தம் + ஆய் = தாய். வயிறு வாய்த்தல்… Read More »ஆகியிருத்தல்

ஆ

ஆ – இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும்; பசு; வலிக்கான குறிப்பொலி; சோறு; ‘ஆவாங்கிக் கொள்’ என்பது வழக்கு சொல் பொருள் இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும். பசு… Read More »

அனப்பு

சொல் பொருள் சூடு, வெப்பம் சொல் பொருள் விளக்கம் அனல் = சூடு, வெப்பம்; அனப்பு என்பதை வெப்பம் அல்லது சூடு என்னும் பொருளில் குமரிமாவட்ட மேல்புரம் பகுதியில் வழங்குகின்றனர். சுடுபடுங்கால் ஒலி உண்டாதல்… Read More »அனப்பு

அறுதி

சொல் பொருள் இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, விலைச்சீட்டு, முடிந்த முடிபு சொல் பொருள் விளக்கம் இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, விலைச்சீட்டு முதலிய பலபொருளையுந் தாராநின்றது. இது… Read More »அறுதி

அழுவங்காட்டல்

சொல் பொருள் இது கேளி செய்தல் சொல் பொருள் விளக்கம் இது கேளி செய்தல் (கேலிசெய்தல்) என்பது அரியகுளம் வட்டார வழக்கு. எள்ளுதலால் அழுமாறு படுத்துதல். இது ‘வலிச்சக் காட்டல்’ எனவும் படும். இயல்பாக… Read More »அழுவங்காட்டல்

அழிகதை

சொல் பொருள் விடுகதை சொல் பொருள் விளக்கம் பிசிர் எனப்படுவது புதிர் என்றும் விடுகதை என்றும் வழங்கப்படும். விடுகதையை அழிகதை என்பது பெரியகுள வட்டார வழக்கு. அழிப்பான் கதை என்பது முகவை மாவட்ட வழக்கு.… Read More »அழிகதை

அவியல்

சொல் பொருள் அவியல் என்பது பலவகைக் காய்கள் கலந்த ஒருகறி வகை சொல் பொருள் விளக்கம் அவியல் என்பது பலவகைக் காய்கள் கலந்த ஒருகறி வகை. இது பொதுவழக்கு. அவியல் என்பது இட்டவியைக் குறிப்பது… Read More »அவியல்

அவயான்

சொல் பொருள் ஆசைப்பெருக்கு சொல் பொருள் விளக்கம் ‘ஆசைப்பெருக்கு’ என்பது வழக்கு. அது கட்டில் நில்லாமல் பெருகுவதால் ‘ஆசைக்கோர் அளவில்லை’; ‘ஆரா இயற்கை அவா’ எனப்பட்டது. ஆசைப்பெருக்கம் போல் பெருத்த உடலுடையதாகிய பேரெலி (பெருச்சாளி,… Read More »அவயான்

அவதி

சொல் பொருள் விடுமுறை, அவதி என்பதற்குத் துயரப்பொருள் உண்டு சொல் பொருள் விளக்கம் வேலையோ கல்வியோ இல்லாமல் விடப்படும் விடுமுறையை அவதி என்பது நெல்லை வழக்கு. அவம் என்பது தம் கடமை செய்யாது இருக்கும்… Read More »அவதி