Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

மறுத்து

சொல் பொருள் மறுத்து – திரும்ப, மீள, மற்றும் சொல் பொருள் விளக்கம் ஒன்றைச் சொல்ல அதற்கு எதிரிடையாகச் சொல்வதோ, ஒன்றைச் செய்ய அதற்கு எதிரிடையாகச் செய்வதோ மறுப்பாகக் கொள்ளப்படும். ஆனால் “நான் சொன்னேன்;… Read More »மறுத்து

மழைபெய்தல் – செழிப்பு மிகுதல், செல்வம் மிகுதல்

சொல் பொருள் மழைபெய்தல் – செழிப்பு மிகுதல், செல்வம் மிகுதல் சொல் பொருள் விளக்கம் “உங்கள் காட்டில் மழைபெய்கிறது; பெய்யட்டும்; பெய்யட்டும்” என்பது மழையைக் குறியாமல் பணவருவாய் பெருகி வருதலைக் குறிப்பதாம். அடைமழை பெய்வதுண்டு.… Read More »மழைபெய்தல் – செழிப்பு மிகுதல், செல்வம் மிகுதல்

மழுமட்டை

சொல் பொருள் மழுமட்டை – அறிவின்மை, வழுக்கலான தன்மை சொல் பொருள் விளக்கம் மழுமழுப்பு என்பது வழுக்கல், மட்டை என்பது மடல். தென்னை பனை ஆகியவற்றின் மட்டை. “குட்டையில் ஊறப் போட்ட மட்டை” மழுமட்டை… Read More »மழுமட்டை

மழுங்குணி

சொல் பொருள் மழுங்குணி – மழுங்கிய தன்மை, அறிவுக் கூர்ப்பும் மானவுணர்வும் மழுங்கியதன்மை சொல் பொருள் விளக்கம் “அவன் மழுங்குணி; போட்டதைத் தின்பான் சொன்னதும் தெரியாது; சொரணையும் கிடையாது” என்பதில் இரு தன்மைகளும் அறிய… Read More »மழுங்குணி

மழுக்கட்டை

சொல் பொருள் மழுக்கட்டை – அறிவுக் கூர்மையில்லாதவன், மானமற்றவன் சொல் பொருள் விளக்கம் மழுங்கல், மழுங்குணி, மழுக்கட்டை, மழுக்கட்டி என்பனவெல்லாம் ஒரு தன்மையவே. மழுங்கல் என்பது கூரற்ற தன்மை. கூர்மை இரண்டு வகையாம். ஒன்று… Read More »மழுக்கட்டை

மல்லாத்தல்

சொல் பொருள் மல்லாத்தல் – தோற்கச் செய்தல் சொல் பொருள் விளக்கம் குப்புறத்தள்ளல், மண்ணைக் கவ்வவைத்தல் என்பவை தோற்கச் செய்வதன் அடையாளமாக இருப்பதுபோல, மல்லாக்கக் கிடத்துதலும் தோற்க வைத்ததன் அடையாளமாகக் கருதப்படுகின்றது. ஆமையை மல்லாக்கக்… Read More »மல்லாத்தல்

மருந்து குடித்தல்

சொல் பொருள் மருந்து குடித்தல் – நஞ்சுண்ணல் சொல் பொருள் விளக்கம் மருந்து என்பது நோய் நீக்கப் பொருள். அதுவே உயிர் காக்கும் பொருள். ஆனால் உயிர் போக்கும் நஞ்சும் மருந்து எனப்படுவது வழக்கு.… Read More »மருந்து குடித்தல்

மதார் பிடித்தல்

சொல் பொருள் மதார் பிடித்தல் – தன்நினைவு அற்றிருத்தல் சொல் பொருள் விளக்கம் இருந்தது இருந்தபடியே, எது நடந்தாலும் அறியாதபடியே மூச்சுவிடுதல் பார்த்தல் ஆயவையன்றி உணர்வு வெளிப்படுத்த மாட்டாத நிலையில் இருப்பதை மதார் பிடித்தல்… Read More »மதார் பிடித்தல்

மணியம்

மணியம்

மணியம் என்பதன் பொருள் அதிகாரம், அதிகாரி 1. சொல் பொருள் மணியம் செய்தல் – அதிகாரம் பண்ணல் அதிகாரம் அதிகாரி மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Manage Munsif, Manager, Officer 3. சொல் பொருள்… Read More »மணியம்

மண்போடல்

சொல் பொருள் மண்போடல்- இறந்தவரைக் குழிக்குள் வைத்து புதைகுழியை மூடல் சொல் பொருள் விளக்கம் மண்போடல் பொதுச் செயல், அதனை விலக்கி இறந்தவரைப் புதைத்த புதைகுழியை மூடுதற்குப் போடுவதே மண் போடலாகவும், மண் தள்ளலாகவும்… Read More »மண்போடல்