Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

நூறு நூறு

சொல் பொருள் நூறு நூறு-நூறாண்டு வாழ்க சொல் பொருள் விளக்கம் தும்மல் உண்டானால் அருகில் இருப்பவர் ‘நூறு’ என்றும் ‘நூறு நூறு’ என்றும் சொல்வர். ‘நூறாண்டு வாழ்க’ என்பதே வாழ்த்துப் பொருளாம். நூறாண்டு நூறாண்டு… Read More »நூறு நூறு

நீர்வார்த்தல்

சொல் பொருள் நீர்வார்த்தல் – தருவதை உறுதிசெய்தல் சொல் பொருள் விளக்கம் தாரைவார்த்தல் என்பதும் இதுவே. “இப்பொருள் உன்னதே; எனக்கும் இதற்கும் உள்ள உரிமையை அல்லது தொடர்பை விலக்கிக் கொள்கிறேன்” என்பதற்கு அடையாளமாக நீர்… Read More »நீர்வார்த்தல்

நீட்டிக் குறைத்தல்

சொல் பொருள் நீட்டிக் குறைத்தல் – தந்து நிறுத்துதல் சொல் பொருள் விளக்கம் ‘நீட்டிக் குறைக்க நெடும்பகை’ என்பது பழமொழி. நீட்டல் என்பது பெரிதாகக் கொடுத்தலையும், குறைத்தல் என்பது முன்பு தந்த அளவில் பன்மடங்கு… Read More »நீட்டிக் குறைத்தல்

நீட்டல்

சொல் பொருள் நீட்டல் – தருதல், அடித்தல், பெருகப்பேசல் சொல் பொருள் விளக்கம் கைந்நீட்டல் தருதல் பொருளதாதல் அறிவோம். அன்றியும் கைந்நீட்டல் அடித்தல் பொருளதாதலும் அறிவோம். இவண் நீட்டல் என்பது கைந்நீட்டல் போல வந்தது.… Read More »நீட்டல்

நாறிப்போதல்

சொல் பொருள் நாறிப்போதல் – அருவறுப்பான குணம், இழிமை சொல் பொருள் விளக்கம் நாற்றம் பழநாளில் நறுமணம் எனப்பொருள் தந்து, பின்னே பொறுக்கமுடியா அருவறுப்பு மணத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கும்… Read More »நாறிப்போதல்

நாவசைத்தல்

சொல் பொருள் நாவசைத்தல் – ஆணையிடல் சொல் பொருள் விளக்கம் நாவு அசைத்தல் என்பது ஒலித்தல், பேசல், ஆட்டல் என்னும் பொருள்களின் நீங்கி ஆணையிடுதல் என்னும் பொருளிலும் வழங்குகின்றது. “அவன் நாவசைத்தால் போதும்; நாடே… Read More »நாவசைத்தல்

நாய்ப்பிழைப்பு

சொல் பொருள் நாய்ப்பிழைப்பு – இழிவு, ஓயாதலைதல் சொல் பொருள் விளக்கம் நாய் நன்றியறிவு மிக்கதாம் உயர்வுடையதாக மதிக்கப்படுகிறது. ஆனால் நன்றி மறக்க வல்லது நாயே. சுவையான ஒன்றை அதற்குத் தந்துவிட்டால் திருடனுக்கும் உதவும்படியாக… Read More »நாய்ப்பிழைப்பு

நாடியைப் பிடித்தல்

சொல் பொருள் நாடியைப் பிடித்தல் – கெஞ்சல் சொல் பொருள் விளக்கம் உதவிவேண்டியோ, செய்த தவற்றைப் பொறுக்க வேண்டியோ காலைப் பிடித்தல் போல நாடியைப் பிடிப்பதும் வழக்கே. காலைப் பிடித்தல் முற்றாக நீரே தஞ்சம்… Read More »நாடியைப் பிடித்தல்

நாடிபார்த்தல்

சொல் பொருள் நாடிபார்த்தல் – ஆராய்தல் சொல் பொருள் விளக்கம் “அவன் ஆளென்ன, பேரென்ன!” என்னை நாடி பார்க்கிறான்”! என்பது தகுதியில்லாதவனாகக் கருதப்படும் ஒருவருன் தன்னை கருத்துரைத் தலைப்பற்றிக் கூறும் கடிதலாகும். நாடிபார்த்து நோய்… Read More »நாடிபார்த்தல்

நாடகமாடல்

சொல் பொருள் நாடகமாடல் – இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏமாற்றல் சொல் பொருள் விளக்கம் நாடகம் உயர்ந்த கலை; எனினும் அதன் உள்ளீடு பெரிதும் புனைவும் கற்பனையுமே. அதனால் ‘நாடகக்காட்சி’ நிகழ்கின்ற முறையிலேயே ஒன்று… Read More »நாடகமாடல்