Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கைதூக்கி

சொல் பொருள் கைதூக்கி – சொன்னபடி கேட்டல் சொல் பொருள் விளக்கம் கைதூக்கல் என்பது ஒப்புகைப் பொருளும் தருவது. ஆனால் அது, உண்மையென்று தோன்றுமானால்தான் கைதூக்கல் நிகழும். இல்லையானால், கைதூக்காமல் கருத்துக்கு ஒப்பளிக்காமல் இருத்தலுண்டு.… Read More »கைதூக்கி

கை தூக்கல்

சொல் பொருள் கை தூக்கல் – உதவுதல், ஒப்புகை தருதல் சொல் பொருள் விளக்கம் கைகொடுத்தல் போல்வதே கைதூக்கலுமாம், கைதூக்கி விடுதல் என்பது பள்ளத்துள் இருப்பாரை மேட்டில் சேர்த்தல். அது போல், கடன்துயர், வறுமை… Read More »கை தூக்கல்

கைகொடுத்தல்

சொல் பொருள் கைகொடுத்தல் – உதவுதல் சொல் பொருள் விளக்கம் ஏறமாட்டாதவரைக் கைதந்து மேடேற உதவுதல் உண்டு. வெள்ளத்துள் வீழ்வாரைக் கை கொடுத்துக் கரையேற்றுதல் உண்டு. அக் கைகொடுத்துத் துயர் தீர்க்கும் நடைமுறையில் இருந்து… Read More »கைகொடுத்தல்

கைகாரன்

சொல் பொருள் கைகாரன் – திறமையாளன். சூழ்ச்சியாளன், ஏமாற்றாளன். சொல் பொருள் விளக்கம் ‘அவன் பெரிய கைகாரன்’ என்றால் திறமையாளன் என்பது பொருள். ஆனால் அத்திறமை பாராட்டுக்குரிய பொதுநலத் திறமையைக் குறியாமல் தன்னலச் சூழ்ச்சியைக்… Read More »கைகாரன்

கெடுபிடி

சொல் பொருள் கெடுபிடி – நெருக்குதல் சொல் பொருள் விளக்கம் கெடுவாவது தவணை. இன்னகாலம் என வரையறுக்கப் பட்டது கெடுபிடியாகும். அந்நாளில் செலுத்தவேண்டியதைச் செலுத்தாவிட்டாலும், வந்து சேரவேண்டிய ஆணை நடை முறைப்படுத்தத் தவறிவிட்டாலும் பிடிப்பாணை… Read More »கெடுபிடி

கூடாரம் போடல்

சொல் பொருள் கூடாரம் போடல் – தங்கிவிடுதல் சொல் பொருள் விளக்கம் கூடாரம் அடித்தல் என்பதும் இதுவே. ஆடு மாடுகளை மேய்ச்சல் புலம் தேடி ஓட்டி வருபவர் ஆங்காங்குக் கூடாரம் அடித்தல் உண்டு. ஊசி… Read More »கூடாரம் போடல்

கூட்டுதல்

சொல் பொருள் கூட்டுதல் – திருமண முடித்தல் சொல் பொருள் விளக்கம் “உனக்குக் கூட்டி வைத்தால்தான் வீட்டில் தங்குவாய்” என்பது ஊர் சுற்றிக்கு வீட்டார் சொல்லும் வாய்ச்சொல். இங்கே கூட்டி வைத்தல் அல்லது கூட்டுதல்… Read More »கூட்டுதல்

கூட்டிக் கொண்டு போதல்

சொல் பொருள் கூட்டிக் கொண்டு போதல் – உடன்போக்கு. சொல் பொருள் விளக்கம் குழந்தைகளைக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போதல் வழக்கம். பார்வை இல்லாதவரையும் அப்படிக் கூட்டிப் போதலுண்டு. கண்டறிந்தவர்கள், கண்டறியாதவர்க்கு வழிகாட்டியாக… Read More »கூட்டிக் கொண்டு போதல்

கூட்டிக் கொடுத்தல்

சொல் பொருள் கூட்டிக் கொடுத்தல் – இணைசேர்த்து விடல் சொல் பொருள் விளக்கம் களத்தில் பொலிபோடும் போதும், தவசம் அளக்கும் போதும் அள்ளுபவர்க்கு வாய்ப்பாகத் தவசத்தைக் கூட்டிக் கொடுப்பது நடைமுறை. கணவன் மனனவியர் மனத்தாங்கல்… Read More »கூட்டிக் கொடுத்தல்

கூகம்

சொல் பொருள் கூகம் – மறைவு சொல் பொருள் விளக்கம் கூகை என்பதொரு பறவை. அப்பறவை பகலில் வெளிப்படுவது இல்லை. இரவுப் பொழுதிலேயே வெளியே வரும் ; இரை தேடித் தின்னும் ஆதலால் கூகை… Read More »கூகம்