Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

தொப்பை

சொல் பொருள் உருட்டப்பட்ட சாண உருண்டையைத் தொப்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை என்பது திரண்ட வயிறு (தொந்தி) என்னும் பொருள் தருவது பொது வழக்கு. சொல் பொருள் விளக்கம் தொப்பி உருண்டைப்… Read More »தொப்பை

தொப்பி

சொல் பொருள் பனம்பழ நார்ச்சதைத் திரளையை (உருண்டையை)த் தொப்பி என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு உருண்டை சொல் பொருள் விளக்கம் பனம்பழ நார்ச்சதைத் திரளையை (உருண்டையை)த் தொப்பி என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. முற்காலத்தில்… Read More »தொப்பி

தொத்தா

சொல் பொருள் தாயைத் தொடுத்துப் பின்னேவந்த தாய் ‘தொடுத்த தாய்’ ஆவர் சொல் பொருள் விளக்கம் தாயைத் தொடுத்துப் பின்னேவந்த தாய் ‘தொடுத்த தாய்’ ஆவர். சின்னம்மை, சிற்றாத்தாள், சின்னாத்தா என்னும் முறைப் பெயர்கள்… Read More »தொத்தா

தொத்தல்

சொல் பொருள் அவர் ஒரு தொத்தல் என்பது இயலாதவர் என்பதாம். சொல் பொருள் விளக்கம் தொத்துதல் என்பது ஒன்றைச் சார்ந்து இருத்தல், மேலே ஏறி இருத்தல் ஆகும். தன் வலிமைக் குறைவால் பிறரைச் சார்ந்து… Read More »தொத்தல்

தொண்டான்

சொல் பொருள் குழிபோல் அமைந்து பொருள் போட்டு வைக்கப் பயன்படும் துணிப் பையையும் தோல் பையையும் தொண்டான் என்பது இறையூர் வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் தோண்டிக், குழி அல்லது பள்ளம் செய்தல்… Read More »தொண்டான்

தொடும்பு

சொல் பொருள் தோல் என்னும் பொருளில் தொடும்பு என்பது இறையூர் வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் தோல் என்னும் பொருளில் தொடும்பு என்பது இறையூர் வட்டார வழக்கில் உள்ளது. தொடக்கு என்பது… Read More »தொடும்பு

தொடுதல்

சொல் பொருள் மிதியடி போடுதலைத் தொடுதல் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும் தொடுதல் – அயற்பால்மேல் கைபடல், வஞ்சினம் கூறல் சொல் பொருள் விளக்கம் காலில் அணியும் மிதியடி போடுதல் தொடுதல் எனப்படும். மிதியடி… Read More »தொடுதல்

தொடு கோல்

சொல் பொருள் வளைந்த குரடு உடைய கம்பு தொடுவையாகும். அது தொடு கோல் எனக் கம்பம் வட்டாரத்தில் வழங்குகிறது. சொல் பொருள் விளக்கம் வளைந்த குரடு உடைய கம்பு தொடுவையாகும். அது தொடு கோல்… Read More »தொடு கோல்

தொடாம் பழம்

சொல் பொருள் தொடுத்து வைக்கப்பட்ட தொடர்போல் சுளைகளையுடைய ஆரஞ்சுப் பழத்தைத் தொடாம் பழம் என்பது இலாலாப் பேட்டை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தொடுத்து வைக்கப்பட்ட தொடர்போல் சுளைகளையுடைய ஆரஞ்சுப் பழத்தைத் தொடாம்… Read More »தொடாம் பழம்

தொடல்

சொல் பொருள் தொடல் என்பது சங்கிலி என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் தொடுத்த வளையங்களால் அமைந்த பின்னல் சங்கிலி. அது ‘தொடர்’ என்பது. தொடர்தலால் பெற்ற பெயர்… Read More »தொடல்