Skip to content

சொல் பொருள் விளக்கம்

தாங்கல்

தாங்கல்

தாங்கல் என்பது ஏரி, நீர்நிலை. 1. சொல் பொருள் (பெ) 1. நீர்நிலை, 2. ஏரி, தாங்கல் என்பது ஏரி என்னும் பொருள் தாங்கியது. (பெ) 3. வட்டார வழக்கில் தாங்கல் வருத்தம் என்னும்… Read More »தாங்கல்

தன்னக் கட்டுதல்

சொல் பொருள் வாங்கிய கடனைத் தீர்ப்பதும் தன்னக்கட்டுதல் ஆகும் மாறுபட்டு இருப்பாரை அல்லது மனம் மாறி இருப்பாரைச் சரிப்படுத்துவதைத் தன்ன(னை)க் கட்டுதல் என்பது முகவை, மதுரை வட்டார வழக்குகள் சொல் பொருள் விளக்கம் மாறுபட்டு… Read More »தன்னக் கட்டுதல்

தறிகெடுதல்

சொல் பொருள் தறிகெடுதல் என்பது நிலைகெட்டு அலைதல் பொருளது இது அவித்தல் என்னும் பொருளில் கம்பம் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் தறி என்பது நிலைபெறல், ஊன்றுதூண். தறிகெடுதல் என்பது நிலைகெட்டு… Read More »தறிகெடுதல்

தளிகை

சொல் பொருள் கோயிலில் வழங்கப்படும் தெய்வ உணவு அல்லது திருவுணவு சொல் பொருள் விளக்கம் தளி = கோயில்; தளிகை = கோயிலில் வழங்கப்படும் தெய்வ உணவு அல்லது திருவுணவு. இது ஐயங்கார் வகையினரால்… Read More »தளிகை

தள்ளை

சொல் பொருள் குலை தள்ளும் வாழையைத் தள்ளை என்பது இலக்கிய வழக்கு சொல் பொருள் விளக்கம் தள்ளை என்பதைத் திசைச் சொல்லாகப் பழைய உரையாசிரியர்கள் உரைப்பர். தள்ளை என்பது தாயைக் குறிப்பது. குலை தள்ளும்… Read More »தள்ளை

தள்ளிவைத்தல்

சொல் பொருள் ஒதுக்கிவைத்தல் என்னும் பொதுப் பொருளில் நீங்கி, பூப்புற்ற பிள்ளையைத் தனித்திருக்க வைத்தலை உசிலம்பட்டி வட்டார வழக்கில் கேட்க முடிகின்றது தள்ளிவைத்தல் – ஒதுக்கிவைத்தல் சொல் பொருள் விளக்கம் ஒதுக்கிவைத்தல் என்னும் பொதுப்… Read More »தள்ளிவைத்தல்

தழுகை

சொல் பொருள் வாழை இலையைத் தழுகை என்கின்றனர் இனித் தழுகை என்பது இறந்தார்க்குப் பன்னிரண்டாம் நாள் செய்யும் கடனாகக் கம்பம் வட்டாரத்தில் வழங்குதல், வாழையிலையில் படைத்தல் வழியாக ஏற்பட்டிருக்கலாம். சொல் பொருள் விளக்கம் வழுவழுப்பு… Read More »தழுகை

தவுள்

சொல் பொருள் ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங் கோடு வட்டார வழக்காக உள்ளது. நாறு… Read More »தவுள்

தவி

சொல் பொருள் குமரி மாவட்டத்தில் தவி என்பது அகப்பை என்னும் பொருள் தருதலை நோக்கச் சோற்றுச் சட்டுவம் மரத்தால் ஒரு காலத்தில் இருந்தமையை உணரலாம். சொல் பொருள் விளக்கம் தவிசு என்பது பலகை. இருப்புப்… Read More »தவி

தவளை நோய்

சொல் பொருள் தவளை தத்துவதெனத் தத்திப் பற்றும் ஏலச் செடியின் நோய் தவளை நோய் எனத் தோட்டத் தொழில் புரிபவர் வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் தவளை தத்துவதெனத் தத்திப் பற்றும் ஏலச்… Read More »தவளை நோய்