சொல் பொருள்
சொல்லாமல் – எண்ணியது இன்னது என்று சொல்லாமல்
கொள்ளாமல் – எண்ணியதற்கு ஏந்தானதைப் பெற்றுக் கொள்ளாமல்.
சொல் பொருள் விளக்கம்
‘ஊருக்குச் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டான்’ என்பதில் சொல்லாமல் என்பது விடை பெறாமல் என்பதையும், கொள்ளாமல் என்பது வழிச் செலவுக்கு வேண்டும் தொகை பெறாமல் என்பதையும் குறிக்கும். ‘சொல்லிக் கொள்ளாமல்’ என்றாலும் இப்பொருள் தருவதேயாம். செலவு உரைத்தலும், வழிச்செலவு தந்து விடை தருதலும் வழக்காக இருந்த நாளில் அவ்வழக்கில் இருந்து வந்தது இது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்