சொல் பொருள்
சொங்கு > சோங்கு. உள்ளீடு இல்லாததை, இருந்தும் வலிமை இல்லாததைச் சோங்கு என்பது பொது வழக்கு
மதுரை மாவட்டத்தில் சோங்கு என்பது கொடுமை என்னும் பொருளில் வழங்குகின்றது
கோண், கோணல் என்னும் பொருளில் நெல்லை வழக்கு உள்ளது.
சோங்கு – உயர்தல்
சொல் பொருள் விளக்கம்
சொங்கு > சோங்கு. உள்ளீடு இல்லாததை, இருந்தும் வலிமை இல்லாததைச் சோங்கு என்பது பொது வழக்கு. மதுரை மாவட்டத்தில் சோங்கு என்பது கொடுமை என்னும் பொருளில் வழங்குகின்றது. கோண், கோணல் என்னும் பொருளில் நெல்லை வழக்கு உள்ளது.
“இந்த மரம் சோங்காக இருக்கிறது” என்பதும், “நல்ல சோங்கான ஆள்” என்பதும் வழக்கில் உள்ளவை. சோங்கு என்பது ‘ஓங்குதாங்கு’ என்னும் இணைமொழிப் பொருளை ஒருங்கு கொண்டதாம். உயரம் அதற்கு ஏற்ற உடற்கட்டு ஓங்கு தாங்கு எனப்படும். அத்தன்மையுடையதே சோங்கு என்க. வளர்ந்தவர், நெட்டை, கொக்கு, கனத்தவர், குதிர், உரல் இரண்டும் ஒருங்கமைந்தவர் ‘சோங்கானவர், தேக்கு, தோதகத்தி மரங்களில் சோங்குக்குத் தனிச் சிறப்பு. பாரி சோங்கான ஆள் என்பதைப் புறநானூறு காட்டுகிறது. சோங்கு ஆண்மைக் குறைவைச் சுட்டுவதாகவும் உண்டு. அது சொங்கு வழியது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்