சொல் பொருள்
சோதா என்பது ஒன்றுக்கும் ஆகாத சோம்பேறி என்னும் பொருள்படுவதாயிற்று
சோதா – உரமிலாப் பருமை
சொல் பொருள் விளக்கம்
சொத சொதப்பான – கெட்டியற்ற – தடிப்பானவனைச் சோதா என்று பழிப்பர். அத்தகையவன் பிறர் போல் ஓட நடக்க வேலை செய்ய முடியாமையால் சோதா என்பது ஒன்றுக்கும் ஆகாத சோம்பேறி என்னும் பொருள்படுவதாயிற்று. சோதாக் கடா என்றும் கூறுவர். இது முகவை நெல்லை வழக்கு.
நடக்கமாட்டாமல் உடல் பருத்துச் சுறுசுறுப்பு இல்லாத குழந்தையைச் ‘சோதா’ என்பர். பெரியவருள் சோதாவும் உண்டு. சொன்னால் ‘சோதா’ ஏற்பாரா? சண்டைக்கு வந்து விடுவாரே. அதனால் குழந்தைச் சோதாவே நிலைபெற்றது. சொதசொத என்பது அளற்று நிலத்தன்மை. மழை சிறிது பெய்து நின்று விட்டபின் நடைவழி சொதசொதப்பாகச் சேறுபட்டுக் கிடக்கும். சொதசொத என்று கிடக்கிறது என்பர். எருமைத் தொழுவமும் சொதசொதப்பாக இருக்கும். இச் சொதசொதப்பாம் தன்மை போல் தசை ‘கொழகொழ’ என இருப்பது ‘சோதா’ வாம், “இன்னும் எட்டு வைக்காத சோதாப்பயல்” என்பது சோதாச் செயன்மையுரை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்