Skip to content

சொல் பொருள்

(வி) 1. விழு, 2. உதிர், 3. தளர், 4. கண்ணீர், குருதி முதலியன வடி,  5. நழுவு, சரிந்துவிழு, 6. வாடு, 2. (பெ) சொரிதல், 

சொல் பொருள் விளக்கம்

1. விழு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fall, drop off, be weary, trickle down as tears, blood, slip off, wither, fade, pouring down as rain

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி – சிறு 133,134

(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன – உட்துளை(கொண்ட) காளான்

மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – நற் 20/9

மார்பு முயக்குதலால் நெறிப்புண்டு உதிர்ந்த பூந்தளிர்களையுடைய

அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி – அகம் 2/14

கடும் காவலையுடைய காவலர்கள் தளர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு

பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து – பரி 12/70,71

பாய்கின்ற குருதியாக வண்ணநீர் வடிய, அவன் அவளிடம் பகைமை கொள்ளாமல் உள்ளம் சோர்ந்துபோக,
அவ்விடத்தில் நிற்காமல் நீங்கிச் சென்று நிலத்தில் வீழ, மனம் கலங்கி,

அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி – கலி 104/40

எலும்புகள் முறியவும், கைகால்கள் ஒடிந்துபோகவும், குடல் சரியக் குத்தி

புரப்போர் புன்கண் பாவை சோர – புறம் 235/12

தன்னால் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய கண்களின் பாவை ஒளி மழுங்க

ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே – ஐங் 428/2

பெருத்த முழக்கத்துடன் மேகங்கள் மழையைச் சொரியத்தொடங்கிவிட்டன

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *