Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நூல், கயிறு,  2. வில்லின் நாண்,

சொல் பொருள் விளக்கம்

நூல், கயிறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

thread, string, cord, bowstring

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ – திரு 183,184

ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி

வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7

மாண்புறு வரியையுடைய வலிய வில்லில் வலிய நாணினைக் கொளுத்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *