சொல் பொருள்
நெகிழ், மெலிவடை, மலர், திற, நழுவு, இறுக்கம் தளர், இளகு, உருகு
சொல் பொருள் விளக்கம்
நெகிழ்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become thin, blossom, open, unfasten, unfold, slip off, loosen, grow tender, melt
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர் – நற் 315/11 மெலிவடைந்த தோளும், கலங்கிய கண்ணையும் உடையவராய் ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும் – கலி 101/4 தீயைக் கடைந்த நெருப்பைச் சேர்த்து வரிசையாக வைத்ததைப் போன்ற மலர்ந்த இதழ்களையுடைய செங்காந்தளும் விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி – ஐங் 200/3 குறுக்காக ஓடும் செவ்வரிகளைக் கொண்ட நீண்ட கண்களைத் திறப்பாயாக பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் – நற் 193/6 பருத்த என் தோள்களில் செறித்த என் ஒளிமிக்க தோள்வளைகள் நெகிழும்படி செய்த என் காதலர் உழையின் போகாது அளிப்பினும் சிறிய ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ – நற் 35/9,10 பக்கத்திலிருந்து நீங்காமல் அருள்செய்தாலும், சிறிதளவு கைதளர்ந்ததால் குறைந்த மேனியழகின் வேறுபாடோ? இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் உள் அவன் அறிதல் அஞ்சி – அகம் 32/10,11 கொட்டும் மழை பெய்த மண்ணைப்போல நெகிழ்ந்து வருந்திய என் உள்ளத்தை அவன் அறிதலை அஞ்சி தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே – ஐங் 32/4 தீயில் பட்ட மெழுகைப் போல வெகு விரைவாக உள்ளம் உருகிப்போய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்