சொல் பொருள்
நெரிவுறு, பரவு, பரப்பு
சொல் பொருள் விளக்கம்
நெரிவுறு, பரவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be crushed, be pressed out as pulp, spread, spread over
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – நற் 20/9 மார்பு முயக்குதலால் நெரிப்புண்டு உதிர்ந்த பூந்தளிர்களையுடைய வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது – மது 243,244 மலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடே முகில்கள் பரவி, சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து, தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 90 கொண்டுவந்த மணலைப் பாவப்பட்ட, அழகிய வீட்டின் முற்றத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்