சொல் பொருள்
தகைதல் – விலை தீர்மானித்தல்
சொல் பொருள் விளக்கம்
தகைதல் கட்டுதல் என்னும் பொருளது. கட்டுப்பாடான நல்ல குணம் தகை எனப்படும். தகைதல் கட்டொழுங்கும் ஆகும். ஒன்றை விலைபேசி ஒப்புக்கொண்டு விட்டால், அவ்வொப்புக் கொள்ளலில் இருந்து எவ்வளவு கூடியதொகை கிடைப்பினும் மாற்றாத கட்டொழுங்கு உடைமையே தகைதல் எனப்படும். “விலை தகைந்து மாறிவிட்டான் அவன், மனிதப் பிறப்புத் தானா?” என்பர். தகைமையை (பண்பை)க் காட்டுவது தகைதல் ஆயிற்றாம். அதனைத் திகைதல் எனவும் வழங்குவர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்