சொல் பொருள்
(பெ) 1. வீட்டின் உள்கட்டு, 2. படைகளின் அணிவகுப்பு, 3. கட்டுமானம், 4. அரண்மனைக் கட்டுமானம்
சொல் பொருள் விளக்கம்
1. வீட்டின் உள்கட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
inner portion of a house, Battle array of an army, built structure, Palatial building
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் திண்ணை பல் தகைப்பின் புழை வாயில் போகு இடைகழி மழை தோயும் உயர் மாடத்து – பட் 143-145 சுற்றுத் திண்ணையினையும், பல உள்கட்டுக்களையும், சிறுவாசலையும், பெரியவாசலையும், நீண்ட நடை(ரேழி)களையும் உடைய மேகங்களை எட்டித்தொடும்(அளவுக்கு) உயரமான மாடத்தில் ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின் பீடு கொள் மாலை பெரும் படை தலைவ – பதி 24/4,5 கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே! எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் – பதி 53/7 (வில் இல்லாமல்) எந்திரக் கட்டுமானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அம்புகளை உடைய வாயில் களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின் புறஞ்சிறை வயிரியர் காணின் – பதி 64/7,8 களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய அரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்