Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பண்பு, தன்மை, இயல்பு, 2. அழகு, 3. தகுதிப்பாடு,

சொல் பொருள் விளக்கம்

1. பண்பு, தன்மை, இயல்பு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

nature, characteristic, beauty, suitability

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய் – கலி 137/17

பகைமையிலும் கொடியது அவரது பண்புகளால் நான் நலிகின்ற நோய்;

அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் – பரி 21/20-22

சமைக்கப்பட்ட கள்ளை உண்டதனாலான களிப்பு தன்னைத் தடுக்க, ஆடுகின்ற விறலியின் அழகு காரணமாக,
நுனி ஒளிரும் வேலினைப்போன்ற சிவந்த பார்வையோடே,
தனக்குத் துணையாக அணைத்துக்கொண்டிருக்கும் தன் கணவனிடம் ஊடல்கொண்டவளின் நிலையும்,

வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே – நற் 270/9-11

பகைவரை ஓட்டிய ஏந்திய வேற்படையை உடைய நன்னன்
பகைவரின் உரிமைமகளிரின் கூந்தலைக் கயிறாகத் திரித்த கொடுமையினும் கொடியது,
மறந்துவிடுவேன் உன் சிறப்பியல்பின் தகுதிப்பாட்டினை.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *