Skip to content
கைத்தடி

தடி என்றால் கம்பு, துண்டம், குண்டான

1. சொல் பொருள்

1. (வி) 1. கொல், அழி, 2. வெட்டு, 2. (பெ) 1. துண்டம், 2. தசை, 3. மூங்கில் கழி, கம்பு, கட்டை

2. உ) குண்டான, அதிக பருமன் கொண்ட

3. தடி என்பது ஏர்க்கால் என்னும் பொருளில் சிங்கம் புணரி வட்டார வழக்காக உள்ளது. ஏர்த்தடி என்பது முகவை வழக்கு

2. சொல் பொருள் விளக்கம்

ஓர் உணவுப்பொருளாகத் தடி என்ற சொல்லுக்குத் தசை என்று பொருள். ஒரு தடித்த மாமிசத்துண்டு என்றும் பொருள் கொள்ளலாம்.

மீன்களிலேயே வரால் மீன் மிகவும் பருமனானது. நீண்டு, உருண்டு திரண்டு இருக்கும். வாளை மீன் நீண்டு இருக்கும். இவற்றின் நடுப்பகுதியை மட்டும் துணித்து எடுத்தால் அதுவே மீன் தடி.

தடி என்பது தடித்தது, வெட்டுதல், தசை முதலிய பல பொருள்தரும் இருவகை வழக்குமுடைய சொல். அப் பொதுப் பொருள் அன்றி, தடி என்பது ஏர்க்கால் என்னும் பொருளில் சிங்கம் புணரி வட்டார வழக்காக உள்ளது. ஏர்த்தடி என்பது முகவை வழக்கு.

தடி
தடி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

kill, destroy, cut down, hew down, piece, flesh, stick.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46

சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்

மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60

மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்

கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு – நற் 60/4

கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை

என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/6

எலும்புடன் தசைத்துண்டங்கள் இருக்கும் வழியெல்லாம் எமக்குக் கொடுப்பான்

தடி
தடி

வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/5

நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி – நற் 254/10

பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன் – பதி 36/5

தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை – பரி 4/21

தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை – பரி 4/21

மனைவியர் நிறை-வயின் வசி தடி சமைப்பின் – பரி 5/39

தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப – கலி 104/53

தடி கண் புரையும் குறும் சுனை ஆடி – கலி 108/41

விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி/கொல் பசி முது நரி வல்சி ஆகும் – அகம் 193/9,10

நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து – அகம் 265/13

காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் – அகம் 366/5

புலவு நாற்றத்த பைம் தடி/பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை – புறம் 14/12,13

விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப – புறம் 64/4

தடி
தடி

குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் – புறம் 74/1

மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/9

தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ – மலை 425

கடிமரம் தடியும் ஓசை தன் ஊர் – புறம் 36/9

கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் – பெரும் 345

பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 177

முடுவல் தந்த பைம் நிண தடியொடு/நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது – மலை 563,564

வெடி படா ஒடி தூண் தடியொடு/தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை – பரி 4/20,21

கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் – அகம் 60/6

தடி
தடி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *