சொல் பொருள்
தடை – தடுத்துக் கேட்கும் வினா
விடை – தடுத்துக் கேட்கும் வினாவிற்குத் தரும் மறுமொழி.
சொல் பொருள் விளக்கம்
மேனிலைத் தேர்வுகளிலும், வாதாட்டு அரங்குகளிலும் ‘தடைவிடை’ ஆட்சியுண்டு. “தடை விடைகளால் நிறுவுக” என்பது வினாவின் அமைதியாம். “இக்கடாவுக்கு விடை என்னை?” என்பதில் வரும் ‘கடா’ என்பதன் பொருள் வினா என்பதாம். இவ்வினா பொதுவாக வினவப்படுவதாம். தடை அத்தகைய தன்று. எழுப்பப்பட்ட கருத்தைத் தடுத்து அல்லது மறுத்து வினாவுவதாம். தடை என்பது தடுக்கும் இயல்பினவற்றை யெல்லாம் தழுவிப் பின்னே பொருளால் விரிந்தது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்