சொல் பொருள்
தென்னங் கீற்றால் முடைபவை தட்டி என்றும் தடுக்கு என்றும் வழங்கும்
தட்டி என்பதும் தட்டட்டி என்பதும் மாடியைக் குறித்தல் முகவை, மதுரை வழக்குகள் ஆகும்
சொல் பொருள் விளக்கம்
தட்டி என்பது தடுப்பு என்னும் பொருளில் பொது வழக்கு. தட்டி பின்னல், தட்டியடித்தல் என்பவை வழங்கு சொற்கள். தென்னங் கீற்றால் முடைபவை தட்டி என்றும் தடுக்கு என்றும் வழங்கும். இனித் தட்டி என்பதும் தட்டட்டி என்பதும் மாடியைக் குறித்தல் முகவை, மதுரை வழக்குகள் ஆகும். தடுக்கு, தடுப்பு, தடை, தட்டு என்பன வெல்லாம் ஒருவழிச் சொற்கள்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்