சொல் பொருள்
தற்பூசுணை என்பதில் உள்ள ‘தன்’ என்பது தண்ணீர்ப் பொருளது. தற் பூசுணை என்னும் நீர் வளமிக்க காயைச் சென்னை வட்டாரம் தண்ணீர்ப் பழம் என வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
தற் பூசுணை என்னும் நீர் வளமிக்க காயைச் சென்னை வட்டாரம் தண்ணீர்ப் பழம் என வழங்குகின்றது. தென்னகப் பகுதியில் தண்ணீர்க் காய் எனக் கறியாக்கியுண்ணத் தக்க காய் உண்டு. சுரைக்காய் (குண்டுச் சுரைக்காய்) போன்றது அது. தற்பூசுணை என்பதில் உள்ள ‘தன்’ என்பது தண்ணீர்ப் பொருளது. தற்காலம் = கார்காலம், மழைக் காலம். ‘தற்பூஸ்’ என்பது கொச்சையும் வழுவுமாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்