சொல் பொருள்
1. (வி) செறிவுடன் இரு
2. (பெ) பூங்கொத்து
சொல் பொருள் விளக்கம்
செறிவுடன் இரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be dense, cluster, bunch
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி – அகம் 301/11 குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது செறிவான பூக்களாலான கண்ணி சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிறு 254,255 மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில் பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்