சொல் பொருள்
தந்தனாப்பாடல் – வறுமைப்படல்
சொல் பொருள் விளக்கம்
துந்தனாப் பாடல் என்பதும் இப்பொருள் தருவதே. பிச்சைக்கு வருபவர் பாட்டுப்பாடிக்கொண்டும் ஆடிக் கொண்டும் வருதல் வழக்கமாதலின் ‘பாட்டுப்பாடுதல்’ என்னும் பொருளில் தந்தனாப் பாடுதல், துந்தனாப்பாடுதல் என வந்ததாம். பஞ்சப்பாட்டுப்பாடுதல் வறுமைப்பாட்டுப் பாடுதல் என்பனவும் வறுமை நிலைமையைக் குறிப்பனவே. ‘தந்தனா’ என்பது இசைமெட்டு; வண்ணப்பாடல்களிலும் இடம் பெறுவது; தாளம்போடல் காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்