சொல் பொருள்
தன் காலில் நிற்றல் – பிறர் உதவி கருதாதிருத்தல்
சொல் பொருள் விளக்கம்
ஒருவர் தன் காலில் தான் நிற்பார். அவ்வாறு தன் காலில் நிற்பதைக் குறியாமல் தன் முயற்சியால், தன் துணிவால், தன் பொருளால் வாழ்வதே, அல்லது பிறரை எதிர் நோக்காமல் வாழ்வதே தன் காலில் நிற்றலாகக் கூறப்படுவதாம். ஆதலால் தன் காலில் நிற்றல் என்பது பிறரை எதிர்பாராது வாழும் வாழ்வைக் குறிப்பது அறிக. கால் என்பது ஊன்றுதல். ஊன்றி நிற்கத் தன் கால் உதவுமே யன்றி ஒட்டுக்கால் உதவி எப்படியும் ஒட்டுக் காலாகத்தானே இருக்கும்? ஒட்டுக்காலில் நிற்கவே ஆகிவிட்டால் தன் காலில் நிற்கவே முடியாதே!
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்