சொல் பொருள்
தமுக்கடித்தல் – பலரறியச் சொல்லல்
சொல் பொருள் விளக்கம்
ஊர் சாற்றுதல் என்பது இன்னும் வழக்கில் உள்ளது கையில் தமுக்கு என்னும் ஒருபக்கப் பறை வைத்துக்கொண்டு அடித்து இடை இடையே நிறுத்தி ஊரவர் அறியவேண்டும் செய்தியைக் கூறும் வழக்கத்தில் இருந்து தமுக்கடித்தல் என்பதும் பலரறியச் செய்தல் என்னும் பொருள் தருவதாயிற்று. “உன்னிடம் ஒன்று சொன்னால் போதும்; தமுக்கடித்து விடுவாயே என்பது இப்பொருளை விளக்கும். இந்நாளிலும் ஊராட்சிமன்ற அறிவிப்பு ஏலம் விடுதல் ஆகியன தமுக்கடித்து அறிவிக்கப் பெறுவது உண்மையே. முன்னாளில் யானை மேல் இருந்து பறையறைந்தறிவித்தல் வழக்கமாக இருந்தது. “அறைபறை அன்னர் கயவர்” என்பது வள்ளுவம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்