சொல் பொருள்
தலைக்கட்டு – குடும்பம்
சொல் பொருள் விளக்கம்
தலை என்பது ஆள் என்னும் பொருளது. தலையை எண்ணுதல் ஆளை எண்ணுதலாம். தலைகட்டுக்குத் தக்க கோயில்வரி, ஊர்வரி, வாங்குதல் இன்றும் நடைமுறை. ஒரு கணவன், மனைவி அவர்களின் குழந்தைதான் என்னும் அளவே தலைக்கட்டு எனப்படுகிறது. ஆகலின் பொதுக் குடும்பம் என்னும் அளவில் குறைந்து பொதுக் குடும்பத்தின் ஓர் உறுப்பாகிய சிறு குடும்பத்தின் அளவே தலைக்கட்டாகும். “இந்த ஊரில் ஐந்நூறு தலைக்கட்டு இருக்கிறது” எனக் கணக்கிடுவர். ஆனால் முந்நூறு வீடுகள் கூட அவ்வூரில் இரா. இரண்டு மூன்று தலைக்கட்டுகளும் ஒரு குடும்பத்தில் இருத்தலுண்டு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்