சொல் பொருள்
(வி) 1. மீளச்செய், திரும்பப்பெறு, 2. தலைகீழாகப்புரட்டு, 3. கழி, கடந்துபோ,
சொல் பொருள் விளக்கம்
1. மீளச்செய், திரும்பப்பெறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
redeem, get back, turn upside down, invert, pass by
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் வன் கை இடையன் – நற் 169/6,7 ஆடுகின்ற தலையையுடைய செம்மறியாட்டின் கூட்டத்தை ஓட்டிக்கொண்டு திரும்பும் வலிமையான கையையுடைய இடையன் அண்ணல் யானை எண்ணின் கொங்கர் குட கடல் ஓட்டிய ஞான்றை தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே – புறம் 130/5-7 தலைமையை உடைத்தாகிய யானையை எண்ணின நீ கொங்கரை மேல்கடற்கண்ணே ஓட்டிய நாளில் அவர் புறங்கொடுத்தலால் தலைகீழாகச் சாய்த்துப்பிடித்த வேலினும் பல யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து – பதி 15/1 ஆண்டுகள் கழிந்துபோக, நீ வேண்டிய நாட்டில் தங்கி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்