தளவம் என்பது செம்முல்லை
1. சொல் பொருள்
(பெ) செம்முல்லை
2. சொல் பொருள் விளக்கம்
செம்முல்லை
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
golden jasmine, jasminum polyanthum Franch. Jasminum polyanthum
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ – நற் 242/2 புதர்கள் மேல் ஏறிப்படர்கின்ற செம்முல்லைக் கொடியின் பூக்கள் மலர தாழை தளவம் முள் தாள் தாமரை - குறி 80 புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ - நற் 242/2 பிடவம் மலர தளவம் நனைய - ஐங் 499/1 ஒண் சுடர் தோன்றியும் தளவமும் உடைத்தே - ஐங் 440/3 தண் நறும் பிடவமும் தவழ் கொடி தளவமும்/வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும் - கலி 102/2,3 பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல - குறு 382/3 அவிழ் தளவின் அகன் தோன்றி - பொரு 199 சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல் - நற் 61/8 பனி வளர் தளவின் சிரல் வாய் செம் முகை - ஐங் 447/2 தளவின் பைம் கொடி தழீஇ பையென - ஐங் 454/1 புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை - அகம் 23/3 புதல் தளவின் பூ சூடி - புறம் 395/6 தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி - அகம் 64/4 புல் இலை வெட்சியும் பிடவும் தளவும்/குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் - கலி 103/2,3 போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினி - ஐங் 412/2 பனி பூ தளவொடு முல்லை பறித்து - கலி 108/42
ஈர்ம் தண் தளவம் தகைந்தன சீர்த்தக்க - கார்40:36/2
தன் போல் முழங்கி தளவம் குருந்து அணைய - திணை150:93/3
தலை அழுங்க தண் தளவம் தாம் நக கண்டு ஆற்றா - திணை150:110/3
குருந்தே கொடி முல்லாய் கொன்றாய் தளவே
முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே - திணை150:116/1,2
முல்லை தளவொடு போது அவிழ எல்லி - ஐந்70:24/2
பெரும் தண் தளவொடு தம் கேளிரை போல் காணாய் - திணை150:105/3
தகு வார் சடையின் முடியாய் தளவம் நகு வார் பொழில் நாகேச்சுர நகருள் - தேவா-சம்:1723/2,3 தளவம் கமழ் புறவம் செறி தண் கூடல் புகுந்தான் - வில்லி:7 20/4 வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்-தம் மகளிர் தெய்வ - வில்லி:13 145/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்