சொல் பொருள்
குலை தள்ளும் வாழையைத் தள்ளை என்பது இலக்கிய வழக்கு
சொல் பொருள் விளக்கம்
தள்ளை என்பதைத் திசைச் சொல்லாகப் பழைய உரையாசிரியர்கள் உரைப்பர். தள்ளை என்பது தாயைக் குறிப்பது. குலை தள்ளும் வாழையைத் தள்ளை என்பது இலக்கிய வழக்கு. அவ்வாறே ஈன்ற தாயை வாழைப் பெயரால் குறிப்பது ஈனுதல் பொருளிலேயே யாம். வாழை குலை தள்ளுதல் ஈனல் எனப்படும். “வாழைக்குத் தானீன்ற காய் கூற்றம்” என்பது இலக்கியச் சான்று. ஈனா வாழை மக்கள் வழக்கு தள்ளையைத் தாய் என்னும் பொருளில் வழங்குதல் குமரி மாவட்ட வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்