Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தழையுடை, 2. மயிலிறகுக் கொத்து

சொல் பொருள் விளக்கம்

1. தழையுடை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

A waist garment of strung leaves and flowers

bunch of peacock’s feathers

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 203,204

சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையுடையை
திருந்திய வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்தி

மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மலை 5

மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *