சொல் பொருள்
(பெ) 1. குறைதல், 2. குற்றம், கேடு, 3. மரணம்
சொல் பொருள் விளக்கம்
1. குறைதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
diminishing, decreasing, fault, blemish, death
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – ஐங் 320/5 கொஞ்சமும் குறையாத பொறுக்கமுடியாத பிரிவுத் துயரத்தைத் தந்தவர். என் திறம் யாதும் வினவல் வினவின் பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு – கலி 19/10-13 என்னுடைய நிலைமை பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்; அப்படிக் கேட்டால், ஞாயிற்றைப் போல விளங்கும் உன் தலைமைச் சிறப்பெல்லாம் அழிந்துபோகுமாறு உன்னுடைய குற்றமற்ற அருமையான பணிகள் முற்றுப்பெறாமல், அங்கு ஓர் அவலநிலை உருவாகக் கூடும். வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து அவல மறு சுழி மறுகலின் தவலே நன்று-மன் தகுதியும் அதுவே – புறம் 238/17-19 எல்லை அளந்து அறியாத திரை அரிதாகிய வெள்ளத்தின்கண் துன்பமாகிய மறுசுழியின்கண் பட்டு சுழலுவதனிலும் இறந்துபடுதலே நன்று, நமக்குத் தக்க செய்கையும் அதுவே.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்