சொல் பொருள்
தார்போடல் – தூண்டிச் சுறுசுறுப்பாக்கல்
சொல் பொருள் விளக்கம்
தார் என்பது இரும்பாலாய கூர்முள். அதனைத் தன்னிடம் கொண்டது தார்க்குச்சி, தார்க்கம்பு, தார்க்கோல், தார் எனப்பல பெயர்களைப் பெறும். தார் போட்டுக் குத்தி அச்சுறுத்தி மாட்டை ஓட்டுவது வழக்கம். ஆதலால் தன்னியல்பாக நடக்கும் மாட்டை விரைந்தோட்ட உதவுவது தார் ஆகும். அத்தார் போலச் சிலரைச் செயலாற்ற வைக்கும் சொல்லும் ‘தார் போடல்’ என்னும் வழக்கில் வந்தது. அவனைத் தார் போடாமல் கிளப்ப முடியாது; “தார் போட்டாலே என்ன என்று கேட்காதவன், இப்படி நயமாகச் சொல்வதைத் தானா கேட்கப் போகின்றான்” என்பர். “தார்க்குத்தையும் பார்த்துவிடுவோம்” என மாடுகள் இருப்பது போல இருப்பவரும் இருத்தல் கண் கூடே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்