சொல் பொருள்
(வி) 1. (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில்) கெடு, சிதைவுறு, 2. பாய்
தாழ்வு என்பது தாவு ஆவது வழக்கு
சொல் பொருள் விளக்கம்
வீழ்வு என்பது வீவு என்றும், வாழ்வு என்பது வாவு என்றும் வழங்குவது போல் தாழ்வு என்பது தாவு ஆவது வழக்கு. தாழ்வு = பள்ளத்தாக்கு, கிடங்கு. “மேடு தாவு பார்த்து வண்டியோட்டு” என்பது வேளாண் தொழில் வழக்கு. கழுத்தின் கண்டத்தின் கீழேயுள்ள குழியைத் தாவு என்றும் கூறுதல் உண்டு. “தாவைப் பிடித்து நெரித்து விட்டான்” என்பர். இவை தென்னக வழக்குகள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
perish, decay, leap
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாவா விருப்பொடு கன்று யாத்து_உழி செல்லும் ஆ போல் படர் தக நாம் – கலி 81/36,37 குன்றாத விருப்புடன், கன்று கட்டப்பட்டிருக்கும் இடத்துக்கு விரைந்தோடும் பசுவைப் போல், இனி நம்மைத் தேடி வரும்படியாக. தண்டு தழுவா தாவு நீர் வையையுள் – பரி 11/106 வாழைத்தண்டைத் தழுவிக்கொண்டு பாய்ந்து வரும் நீரைக் கொண்ட வையை ஆற்றில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்