சொல் பொருள்
திக்கு – சொல் வெளிப்பட முடியாத நிலை.
முக்கு – மூச்சு வெளிப்பட முடியாத நிலை.
சொல் பொருள் விளக்கம்
அவன் திக்குமுக்காடிப் போனான் என்பது வழக்கு. திக்கு முக்காடுதல் அச்சத்தால் நிகழ்வதாம்.
திக்குதல் திணறுதல் என்பது காண்க. திக்கிப் பேசுதல், திகைப்பு வருதல் என்பவைக்கெல்லாம் அச்சமே அடிப்படையாம்.
உடற்குறையால் வருவதாயின் அச்சத்தின் பாற் படுவதில்லையாம். அவர்க்கு அச்சமும் கூடின் “ உள்ளதும் போயது நொள்ளைக் கண்ணா” என்னும் பழமொழிக்கு மெய்ப்பாகும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்