சொல் பொருள்
திண்ணக்கம் – சோம்பல் செயலாற்றும் மனமில்லாமை.
மண்ணக்கம் – மண்ணுள் மண்ணாய் ஆகி மட்கிப் போகும் நிலை.
சொல் பொருள் விளக்கம்
திண்ணக்கம்- சோம்பல் செயலாற்றும் மனமில்லாமை. எதையும் பொருட்டாக எண்ணாமல் மன இறுக்கத்துடன் இருத்தல். இவ்வாறு இருந்தே பழகி விட்டால் வேளைக்கு உண்ணல்; திண்ணையில் சத்திரம் சாவடிகளில் படுத்து கிடத்தல்; என்ற அளவிலேயே வாழ்வு சுருங்கிப் போகும். அந்நிலைமை உயரிய வாழ்வு ஆகாது. போம் அளவும் ஒரு நோயாய்ச் சீரழியும், சீரழிக்கும். அந்நிலை முற்றின் மண்ணோடு மண்ணாகி மட்கி மடியும் பாடு ஆகிவிடும். மண்ணக்கம் – மண்ணுள் மண்ணாய் ஆகி மட்கிப் போகும் நிலை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்