சொல் பொருள்
(பெ) ஒரு சோழ மன்னன்
சொல் பொருள் விளக்கம்
ஒரு சோழ மன்னன்
இவன் உறந்தை எனப்படும் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த சோழமன்னன். இவனது மகன் வெளியன். இவனைத் தித்தன் வெளியன் என்பர். இவனுக்கு ஐயை என்ற ஓர் மகள் உண்டு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chozha king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழை அணி பணைத்தோள் ஐயை தந்தை மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு வேழ வெண் புணை தழீஇ பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய நெருநல் ஆடினை புனலே – அகம் 6/3-11 நகைகள் அணிந்த, மூங்கில் போன்ற தோள் உடைய, ஐயை-இன் தந்தையாகிய, மழை போன்று வளம்தரும் மிக்க வண்மையுடைய தித்தனின், குவியல் நெல்லையுடைய உறந்தை நகரில் ஓடக்கோலும் நிலைத்து நில்லாத காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கில், குழை முதலான சிறந்த அணிகளையுடைய நீ விரும்பியவளுடன் வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி, பூழியரின் குளத்தை நாடிச் செல்லும் யானையைப் போன்று முகமலர்ச்சியுற்று, உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மாலை குழைந்துபோகும்படி, நேற்று புனலாடினாய் என்ற அடிகளால், இவன் காலத்தில் உறையூர்க் காவிரியாற்றுத் துறையில் நீராட்டுவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது என அறிகிறோம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்