சொல் பொருள்
(பெ) 1.அழகு, 2. இலக்குமி, 3. செல்வம், 4. பொலிவு, ஒளிர்வு, 5. சீர், சிறப்பு, 6. தெய்வத்தன்மை
சொல் பொருள் விளக்கம்
1.அழகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beauty, Lakshmi, the Goddess of Wealth and Prosperity, wealth, lustre, brilliance, eminence, divinity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24 திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில் திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 70 திருமகள் வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும் திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 89, 90 செல்வம் நிலைபெற்ற குற்றமற்ற சிறப்பினையுடைய, கொண்டுவந்த மணலைப் பாவி இறுக்கமாக்கப்பட்ட, அழகிய வீட்டின் — முற்றத்தில் கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் – மது 511 சங்கினை அறுத்துக் கடைவாரும், ஓளிர்வுள்ள மணிகளைத் துளையிடுவாரும் திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/20,21 நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள், அந்தச் சீரினால் அயலார் கூறும் இழிப்புரைகளை மாற்றத்தக்க ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை – கலி 135/12 ஒளிவீசும் மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் தெய்வத் திருவழகை இழந்தவளை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்