சொல் பொருள்
(இ.சொ) தில் என்ற இடைச்சொல்லின் நீட்சி,
1.விருப்பம், 2.காலம், 3.குறிப்பு என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்.
சொல் பொருள் விளக்கம்
தில் என்ற இடைச்சொல்லின் நீட்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
an elongated form of the word ’til’
particle signifying a desire, time or a suggestion
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடிக்கும் கேளிர் நும் குறை ஆக நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/1,2 என்னைக் கடிந்துரைக்கும் நண்பர்களே! உங்கள் கடிந்துரையானது என் உடம்பைக் குலைந்துபோவதினின்றும் நிறுத்த முடிந்தால் அதைப் போன்று நல்லது வேறில்லை. நன் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும் கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கி செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் வாரற்க தில்ல தோழி- நற் 151/1-5 நல்ல நெற்றியில் பசலை பாய்ந்தாலும், பெருத்த தோள்கள் மெலிந்துபோனாலும் கொல்லக்கூடிய பகையுணர்வுகொண்ட பெரிய புலியின் சேரற்கரிய சிறிய நுழைவிடத்தைத் தாக்கி சிவந்த கறையினைக் கொண்ட வெண்மையான கொம்பினையுடைய யானை அந்தக் கறையை மலைமேலிருந்து விழும் அருவிநீரில் கழுவும் மலைச்சாரல் நெறியில் வராமலிருப்பானாக, தோழியே! நம் உறு துயரம் நோக்கி அன்னை வேலன் தந்தாள் ஆயின் அ வேலன் வெறி கமழ் நாடன் கேண்மை அறியுமோ தில்ல செறி எயிற்றோயே – ஐங் 241/1-4 நாம் படும் பாட்டைப் பார்த்து, அன்னை வெறியாடும் வேலனை அழைத்து வந்தால், அந்த வேலன் நறுமணம் கமழும் நாட்டினையுடைவனோடு நாம் கொண்டுள்ள நட்பை அறிந்து சொல்வானோ? செறிவான பற்களைக் கொண்டவளே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்