சொல் பொருள்
(பெ) ஓய்விடம், ஒதுக்கிடம்,
சொல் பொருள் விளக்கம்
ஓய்விடம், ஒதுக்கிடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
temporary abode, place of retreat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம் மா இரும் பெடையோடு இரியல் போகி பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர் தூதுணம்புறவொடு துச்சில் சேக்கும் – பட் 54-58 மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய) (நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி, பூதங்கள் (வாசலில்)காத்துநிற்கும் நுழைவதற்கு அரிய காவல் உள்ள (காளி)கோட்டத்தில், கல்லைத் தின்னும் அழகிய புறாக்களுடன் ஒதுக்குப்புறமாகத் தங்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்