சொல் பொருள்
(வி) 1. தூங்கு, 2. தலைகவிழ்ந்திரு, 3. நிலைகொண்டிரு, 4. தங்கு, 5. செயலற்று இரு, 6. சோம்பியிரு
சொல் பொருள் விளக்கம்
1. தூங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sleep, hang head down, abide, settle down, stay, be inactive, indolent, be idle, lazy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/7 தூங்குகின்ற புலியை இடறிய பார்வையற்றவன் போல தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – கலி 119/6 தம் புகழைக் கேட்டவர் தலை நாணி நிற்பது போல் தலையைச் சாய்த்து மரங்கள் தூங்க துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு – சிறு 106 சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்று நிலைகொண்டிருக்கும் நெடிய சிகரங்களையுடைய சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 121 வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும் நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச கோடை நீடிய பைது அறு காலை – அகம் 42/5,6 நாட்டில் வறுமை மிக, கலப்பைகள் செயலற்று இருக்க கோடை நீண்ட பசுமையற்ற காலத்தில் துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி – புறம் 182/4 சோம்பியிருத்தலுமிலர், பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்