சொல் பொருள்
துடைப்பதற்கு உரிய கருவி துடைப்பம்; துடைக்குமாறு; விளக்குமாறு, கூட்டுமாறு, வாரியல் முதலியனவும் அது.
குப்பை கூளம் தும்பு தூசி ஆகியவற்றைக் கூட்டிப் பெருக்கி வாரிக் கொட்டிய பின்னர்ச் செய்யவேண்டிய பணி மெழுகுத லாகும்.
சொல் பொருள் விளக்கம்
மண்தளமாக இருந்த காலத்தில் சாணக நீர் கொண்டு மெழுகும் வழக்கம் இருந்தது. செங்கல் கல், ஆயதளம், ஏற்பட்ட பின் தண்ணீர் தெளித்துத் துடைத்தல் ஆயிற்று. இதுகால் பளிக்குத் தளத்தில் பளிச்சிடும் வகையில் துடைத்து எடுக்கக் கருவிகள் உண்டாகிவிட்டன. வெள்ளி செவ்வாய் ஒவ்வொருவர் வீட்டையும் மெழுகுதல் தமிழக வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்