சொல் பொருள்
துட்டு – நான்கு சல்லி, அளவுடைய ஒரு காசு.
துக்காணி – இரண்டு சல்லி அளவுடைய ஒரு காசு.
சொல் பொருள் விளக்கம்
துட்டு என்பது முந்தை வழங்கிய ஒரு காசு வகையாம். ஒரு ரூபாவுக்கு 48 துட்டு என்பதும் அணாவுக்கு 3 துட்டு என்பதும், ஒரு துட்டுக்கு 4 சல்லி என்பதும் முன்னே வழங்கிய காசு வகை. தெலுங்கில் துக்காணி என்பது, இரண்டு சல்லியைக் குறிக்கும் ஒரு வகை காசாக இருந்தது. ஒரு துட்டு. அரைத்துட்டு என்னும் அளவின துட்டு துக்காணி என்பவை என்க.
“துக்காணி போல் ஒரு பொட்டிட்டு” என்பது தனிப்பாடல். “துக்குணி கிள்ளி” என்னும் குற்றாலக் குறவஞ்சியால் துக்குணி சிறிதாதல் புலப்படும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்