சொல் பொருள்
(வி) 1. அஞ்சாமல் செயலில் ஈடுபடு, 2. வெட்டு, கூறுபடுத்து,
(பெ) 1. துண்டம், 2. தெளிவு,
சொல் பொருள் விளக்கம்
1. அஞ்சாமல் செயலில் ஈடுபடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dare, venture, cut, sever, piece, slice, clarity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/46 தன் தோள் வலிமையினால் துணிந்த பிடிப்பு நெகிழ, காளையின் கழுத்தை விட்டுக் கைகள் தள்ளப்பட உடல் தளர்ந்து கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை தொடலை வாளர் தொடுதோல் அடியர் – மது 635,636 கல்லையும் மரத்தையும் வெட்டும் கூர்மையுடைய தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்; கொழு இல் பைம் துணி வைத்தலை மறந்த துய் தலை கூகை – பதி 44/17,18 திரட்சி இல்லாத பசிய இறைச்சித் துண்டத்தை வைத்த இடத்தை மறந்த பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகையை துணி நீர் அருவி நம்மோடு ஆடல் – ஐங் 224/3 தெளிவுள்ள நீரை உடைய அருவியில் நம்மோடு நீராடுதல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்