சொல் பொருள்
துணியைத் தாண்டல் – உறுதி மொழிதல்
சொல் பொருள் விளக்கம்
மெய்கூறல் (சத்தியம் செய்தல்) என்பதன் முறைகளுள் ஒன்று துணியைத் தாண்டல், பிள்ளையைப் போட்டுத் தாண்டலும் இத்தகைத்தே. பிள்ளையைப் போட்டுத் தாண்டலாகக் கருதப்படும் உறுதியே துணியைப் போட்டுத் தாண்டலுமாம். ‘துணி’ மானப் பொருள். அதனை எடுத்துப் போட்டுத் தாண்டல் மானத்தின் அடையாளம் எனப்பட்டதாம். “நான் சொல்வது பொய் என்றால் இத்தாண்டு பிள்ளை ஐயோ என்று போய்விடும்” என்பதுபோல, நான் சொல்வது பொய் என்றால் கட்டத் துணியில்லாமல் போய்விடும் என உறுதி மொழிவது இவ்வழக்கின் பொருளாம். துணி கிடையாது என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்