சொல் பொருள்
துப்புணி = எச்சில் (துப்பு நீர்). உமிழ் நீர் என்பதும் அது
சொல் பொருள் விளக்கம்
‘துப்பும் நீர்’ எனபதைத் ‘துப்புணி’ என விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றனர். தண்ணீர் தண்ணி எனப்படுவது போல், ‘ணீர்’ ‘ணி’யாகிவிட்டது. துப்புணி = எச்சில் (துப்பு நீர்). உமிழ் நீர் என்பதும் அது. துப்பு என்பது ‘துய்ப்பு’ என்பதன் தொகுத்தல். அதன் செவ்விய வடிவம் அந் நீரின் துய்ப்புச் சிறப்பைக் காட்டுவது. அதன் எழுத்துக் குறையோ (துப்பு) இழிமை ஆகிவிட்டது. உண்டது அறச் செய்யும் அருமைநீர் அறியாமையால் பாழாக்கப்படுவது சொல்லால் தெளிவாகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்