சொல் பொருள்
(வி) 1. குவி, நிறை, 2. கவ்விப்பிடி, 3. உண், தின், 4. நெருங்கு,
சொல் பொருள் விளக்கம்
1. குவி, நிறை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
heap, fill, seize with the mouth, eat, come near
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூவை துற்ற நால் கால் பந்தர் சிறு மனை வாழ்க்கை – புறம் 29/19,20 கூவை இலைகள் குவித்துவைக்கப்பட்ட நான்கு கால்களையுடைய பந்தலாகிய சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கை பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி – அகம் 36/1,2 பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன் வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையைக் கவ்வி, துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் – பொரு 103 அறுகம் புல் கட்டுக்களைத் தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்) வெம் கதிர் கனலி துற்றவும் – புறம் 41/6 வெய்ய சுடரையுடைய ஞாயிறு நெருங்கிவரவும் (சுட்டெரிக்கவும்)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்