சொல் பொருள்
(பெ) 1. நீர்த்திவலை, 2. மழைத் தூவல், 3. தேன்துளி,
சொல் பொருள் விளக்கம்
1. நீர்த்திவலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Watery particle, drop, spray, drizzle, drop of honey
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும் – அகம் 262/15 நுண்ணியவான பல நீர்த்துளிகள் மலை மீது உள்ள புதர்களை எல்லாம் நனைக்கும் கல்லென் துவலை தூவலின் யாவரும் தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 64,65 ‘கல்’லென்கிற ஓசையுடன் தூறல் (நீர்த்திவலைகளைத்)தூவுவதால், ஒருவருமே குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்ப் மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர் தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன – அகம் 41/13,14 மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்